புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் படக்கூடிய கஷ்டம், அவர்கள் சந்தித்த துயரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் தெரியும். பெரும் இன்னல்களை அவர்கள் சந்தித்து தங்களது சொந்த ஊர்களுக்கு தற்போது சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுகள் சார்பில் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் அவர்கள் அனுப்பி வைத்து வருகின்றனர். இருப்பினும் அவர்களது துயரம் என்பது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற விசாரணையில் உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில் நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய மாநில அரசுக்கள் எடுத்த நடவடிக்கை என்னென்ன ? எவ்வளவு பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று கேள்வி எழுப்பியது உச்சநீதிமன்றம்.
இதற்க்கு மத்திய அரசு சார்பில், சுமார் ஒரு கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். 51 லட்சம் பேர் ரயில் மூலமாகவும், 41 லட்சம் பேர் சாலை மார்க்கமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் செய்யாதவர்களின் மனுவை விசாரிக்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்தது.