கல்லீரல் தான் நம் உடல் உறுப்புகளில், இக்கட்டான சூழ்நிலையில் போராடுகிறது. நமக்கு மிகப்பெரிய நண்பன் கல்லீரல் தான்.இதனை நாம் பாதுகாக்க மறந்தால் நாம் உயிர் வாழ முடியாது. மற்ற உறுப்புகளை விட இரு மடங்கு வேலையை செய்கிறது.
நமது உடலில் காயம் பட்டவுடன் நமது மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். அடுத்த நொடி பொழுதில் இரத்தம் வெளியேறும் இடத்திற்கு சில ரசாயனங்களை கல்லீரல் அனுப்பி வைக்கும்.இது இரத்தம் உறைவதற்கு ஏற்ப செயல்பட்டு இரத்தத்தை உறைய செய்து விடும்.கல்லீரல் இந்த வேலையை செய்யாமல் இருந்தால் நாம் இரத்தம் உறையாமல் இறப்பு வரை கொண்டு செல்ல வாய்பாகும்.
நாம் எடுத்து கொள்ளும் அத்தனை மாத்திரைகளும் நமக்கு மிகப்பெரிய அளவில் பின் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதில் உள்ள நச்சு தன்மையை நம் உடலில் சேராமல் காப்பது கல்லீரல் தான்.
மது குடிப்பதால் அது இரத்தத்தில் கலந்து மனித உடலையே அழித்து விடும்.ஆனால் கல்லீரல் முழுமையாக செயல் பட்டு இரத்தத்திலிருந்து ஆல்கஹால் ஐ பிரித்தெடுக்கும் பணியை செய்கிறது. கல்லீரல் கெட்டு விட்டது என்றால் மது அருந்தும் பல பேர் இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்க வாய்பில்லை.
கல்லீரலை பாதுகாக்க:

கல்லீரலை பாதுகாக்க மறந்தால் நாம் சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவு மட்டும் அல்ல மருந்து,மாத்திரைகள் , ஆல்கஹால் என எதுவுமே செரிக்காது. அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது அது கல்லீரலை வீக்கமடைய செய்யும். எனவே நம் கல்லீரலை பாதுகாக்க மதுவையும்,புகையை யும் தவிர்க்க வேண்டும்.
*டீ, காபி, குளிர்பானங்கள் இவற்றை தவிர்க்க வேண்டும். மாறாக பழச்சாறு, கரும்பு சாறு, பதநீர், எலுமிச்சை சாறு, மோர் இவற்றை பருகலாம்.
*உணவை மெதுவாக மென்று சாப்பிடுவது நல்லது.
*தேவையான அளவு உடம்பிற்கு ஓய்வு அளிக்க வேண்டும்.
*கூடுமான வரை ஆங்கில மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்..