Categories
தேசிய செய்திகள்

பணம் கேட்டா கொடுங்க….. இல்லையேல் நடவடிக்கை….. மத்திய அரசு உத்தரவு….!!

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அவசர கால கடன் கேட்டால் அதை மறுக்காமல் வங்கிகள் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் சிறந்த வழி என்பதால், கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 6 கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்தது. ஜூலை 31 க்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டாலும், பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கினால் பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது. மத்திய அரசு பொருளாதாரத்தை உயர்த்தும் விதத்திலும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் தொழில் தொடங்குவோர்களுக்கான கடன் வழங்கும் வசதியை ஏற்படுத்தி அதற்கான நிதியையும் ஒதுக்கியது. தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அவசர கால கடன் வழங்க வங்கிகள் மறுக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கடன் வழங்க மறுத்தால் சம்பந்தப்பட்ட சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசிடம் புகார் தெரிவிக்கலாம். அரசு சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |