கொரோனா நோய்தொற்று அதிகமாக உள்ள 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான உத்திரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலத்தில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களின் நலன் கருதி மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அதன்பின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளில் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது முக்கியமான ஒன்றாகும். முகக் கவசம் அணியாமல் பிடிபட்டால் ரூ 10,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். முதல் முறை பிடிபட்டால் ரூ 1000 ரூபாயும், இரண்டாம் முறை பிடிபட்டால் ரூ 10,000 ரூபாயும் அவதாரம் கட்டாயம் விதிக்கப்படும்.
இந்த உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று முதல் அமல் படுத்தி உள்ளார். கொரோனா தொற்று தினசரி எண்ணிக்கை 2000 க்கும் அதிகமான உள்ள 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் நேற்று மட்டும் 20 ஆயிரத்து 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் 1.11 லட்சம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.