Categories
தேசிய செய்திகள்

சட்டமன்ற குழுவின் விசாரணைக்கு வரவில்லை என்றால்… வலுக்கட்டாயமாக இழுத்து வரப்படுவார்கள்… பேஸ்புக்கிற்கு அரசு எச்சரிக்கை…!!

டெல்லி சட்டமன்ற குழுவிற்கு ஃபேஸ்புக் நிறுவனம் வரவில்லை என்றால் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுவார்கள் என அரசு எச்சரித்துள்ளது.

பாஜக மற்றும் பல தலைவர்களின் வெறுப்பைத் தூண்டும் விதத்தில் இருந்த பேச்சுக்களை அனுமதித்ததாக ஃபேஸ்புக் மீது குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில், டெல்லி சட்டமன்ற விசாரணைக்கு ஆஜராக முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்து விட்டது. அதாவது, டெல்லி சட்டமன்றத்தின் அமைதி மற்றும் சமாதான குழுவினர் இது இதுகுறித்து பேஸ்புக்கிற்கு சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதற்கு பதிலளித்துள்ள ஃபேஸ்புக் நிர்வாகம், ஏற்கனவே எம்பிக்கள் நிலைக்குழுவில் தமது பதிலை கூறிவிட்டதால், டெல்லி அரசின் விசாரணையை சந்திக்க அவசியம் இல்லை என தெரிவித்து விட்டது. ஃபேஸ்புக்கின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என அந்த ஃபேஸ்புக் கூறியதால், அதில் ஆத்திரமடைந்துள்ள டெல்லி சட்டமன்ற குழு, மீண்டும் ஃபேஸ்புக்கிருக்கு சம்மன் அனுப்பப்படும், ஆனால் அப்போதும் வர மறுப்பு தெரிவித்தால் ஃபேஸ்புக் நிர்வாகிகள் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

Categories

Tech |