செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ராஜன் செல்லப்பா, இனி மேலும் தவறான எண்ணங்களுக்கு மதிப்பிற்குரிய அண்ணன் ஓபிஎஸ் போக மாட்டார் என்று விரும்புகிறேன், அவர் கூட இருப்பவர்கள் தான் சில பேர் ஏதோ காரணத்தை சொல்லி அவரை இன்னும் தவறான வழிக்கு இழுத்துச் செல்வதற்காக முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே தவறு செய்துவிட்டு அதிலிருந்து தப்பிக்க வழி கிடைக்காமல் இருக்கிறார்.
இப்போது தொடர்ந்து அந்த தவறை செய்வதற்கு உடன் இருக்கின்ற சில பேர் தள்ளுகிறார்கள், நிச்சயமாக தொண்டர்கள் விரும்பாத தவறை அவர் மீண்டும் செய்ய மாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம். திமுகவோடு தொடர்புடையவர்கள், திமுகவினுடைய ஆதரவைப் பெற்று இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் சதி செய்பவர்கள் நிச்சயமாக இணைக்கப்பட மாட்டார்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திமுகவை தீய சக்தி என்று சொல்லி சென்றிருக்கிறார். எங்கள் தொண்டர்கள் இதயத்தில் அதுதான் இடம் பிடித்திருக்கிறது. திமுகவினுடைய எந்த தொடர்பும் இல்லை, என்னைப் பற்றி தவறான தகவல் சொல்லி இருக்கிறார்கள் என்று ஓபிஎஸ் நிரூபித்தால் நீங்கள் சொல்வது போல் அதிமுகவுக்கு வரலாம், அதற்கு வாய்ப்பில்லை. திமுகவுடன் இதுக்கு மேல் என்ன தொடர்பு வேணும்.
திமுக 1, 2 சதவீதம் நல்லதாக செய்தால் கூட பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை எங்களுக்கு, அவரும் அவருடைய செல்வனும் திமுக அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார் என்றால், தொண்டர்களை புண்படுத்துகிறார் என்று தானே அர்த்தம் என தெரிவித்தார்.