சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமானவர் மணிமேகலை. அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் யூட்யூபில் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
இந்நிலையில் குறுகிய காலத்தில் புதிய வீடு, கார் என கலக்கி வரும் மணிமேகலை சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது எனக்கு குழந்தை பிறந்தால் அது விஜய் டிவிக்கு தான் சொந்தம் என்று கூறியுள்ளார். மேலும் விஜய் டிவிக்கு தன்னுடைய குழந்தையை சொந்தமாக்கும் அளவுக்கு மணிமேகலைக்கு டிவி அவ்வளவு நல்லது செய்துள்ளதாம்.