சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு எம்ஜிஆர் உடனான தன்னுடைய மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தையின் நெருங்கிய நண்பராக எம்ஜிஆர் அவர்கள் இருந்ததால் எனக்கு அவரை அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் எம்ஜிஆரை சார் என்று அழைத்தால் அவருக்கு பிடிக்காது. இது குறித்து அவர் ஒரு முறை என்னுடைய தந்தை கருணாநிதியிடம் புகார் கூறியுள்ளார்.
அதன் பிறகு ஒரு காலத்தில் எம்ஜிஆர் பட ரிலீஸ் என்றால் அதை பார்ப்பதற்கு நான் மிகவும் ஆர்வம் காட்டுவேன். நான் அவர் மீது அதிக அன்பு கொண்டிருந்ததால் எனக்கு நடிப்பு குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார். எம்ஜிஆரின் மனைவி ஜானகி மிகவும் திறமை வாய்ந்தவர். அவர் சிலம்பு கலையில் கை தேர்ந்தவராக இருந்ததோடு, 6 மொழிகளிலும் புலமை வாய்ந்தவராக இருந்தார். அவர் நடித்த முதல் படமான மருதநாட்டு இளவரசிக்கு கதை எழுதியது என்னுடைய தந்தை கருணாநிதி தான். அப்படத்தில் ஜானகி, எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி ஆகிய 3 பேரும் இணைந்து தான் பணியாற்றினார்.
அதன் பிறகு டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் ஜானகி கலை மற்றும் கல்லூரியை தொடங்குவதற்கு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுகவில் பொருளாளர் பதவியில் இருந்த எம்.ஜி.ஆருக்கும் கட்சியின் தலைவரான கருணாநிதிக்கும் நிதி தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதால் தான் எம்ஜிஆர் அதிமுக என்ற தனி கட்சியை தொடங்கினார். இருப்பினும் எம்ஜிஆர் அண்ணாவின் கொள்கைகளை தான் பின்பற்றினார். மேலும் எம்ஜிஆர் கட்சி தொடங்கியதில் இருந்து 3 முறை முதல்வராக பணியாற்றியுள்ளார் என்று கூறியுள்ளார்.