Categories
உலக செய்திகள்

அதுக்கு மட்டும் கொரோனா வந்துடுச்சு உலகிற்கு பேரழிவு தான் – எச்சரிக்கும் ஆய்வாளர் …!!

மனிதர்களிடம் இருந்து வவ்வால்களுக்கு கொரோனா பரவினால் அது பெரும் அழிவைக் கொடுக்கும் என அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்

வவ்வால்களுக்கு மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்று ஏற்படுவது அபூர்வமே ஆனால் அவ்வாறு பரவி விட்டால் அது பேராபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அறிவியல் நிபுணர்கள். அதோடு உயிரியல் பிரிவில் இருப்பவர்களும் வனத்துறை தன்னார்வலர்களும் தொற்று பரவிவரும் இந்த காலகட்டத்தில் வவ்வால்களை கையாள வேண்டாம் என எச்சரித்துள்ளார்கள்  அறிவியலாளர்கள்.

இதுகுறித்து உயிரியலாளர்  வில்லிஸ் கூறியதாவது கொரோனா மனிதனிடம் இருந்து வவ்வால்களுக்கு பரவ கூடாது. அதன் காரணமாக வவ்வால்கள் தொடர்புடைய பணிகளை உடனடியாக நிறுத்த பரிந்துரைக்க உள்ளோம். மனிதர்களிடமிருந்து வவ்வால்களுக்கு கொரோனா தொற்றி விட்டால் அதிகப்படியான வவ்வால்கள் கொரோனாவை பரப்பும் உயிரினமாகவே மாறிவிடும். அவ்வாறு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் வவ்வால்களுக்கு தொற்று ஏற்பட்டுவிட்டால் மக்களின் நிலைமை மிகவும் மோசமானதாக மாறிவிடும்.

ஏற்கனவே வவ்வால்களிடம் இருந்து தான் கொரோனா தோற்று பரவியது என்ற கருத்து மக்கள் மத்தியில் உலாவி வருகிறது. ஆனால் அது உண்மையிலேயே எங்கிருந்து வந்தது என யாரும் அறிந்ததில்லை. ஒருவேளை வட அமெரிக்க வவ்வால் இனமான பழுப்பு வவ்வாலிடம் இருந்து கூட இந்த தோற்று பரவி இருக்கலாம். வவ்வால் ஆராய்ச்சி செய்பவர்கள் இப்போதைய சூழ்நிலைக்கு ஆராய்ச்சிகளை தொடர வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |