Categories
தேசிய செய்திகள்

மார்ச்-31 க்குள் ஆதார் இணைக்கவிட்டால்…. உங்கள் பணத்திற்கு ஆபத்து…. அரசு அதிரடி…!!

மத்திய அரசின் ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் என்னை இணைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களும் வங்கி கணக்குகளை பயன்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2014ம் வருடத்தில் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டம் போன்ற பல வசதியோடு மாநில மற்றும் மத்திய அரசு நிதி உதவிகள் ஆகியவை இந்த கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தில் இணைந்திருப்பவர்களுக்கு இது தற்போது மிக முக்கியமான விஷயமாகும். என்னவென்றால் ஜன் தன் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளுடனும் ஆதார் எண் மற்றும் பான் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இணைப்புக்கு மார்ச் 31-ஆம் தேதி தான் கடைசி. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடைபெற்ற போது நிறைய பணம் இந்த வங்கிக்கணக்கில் பதுக்குவதாக புகார் எழுந்ததால் ஆதார் மற்றும் பான் போன்ற விஷயங்கள் அரசு கடுமையாக்கியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ரூபே கார்டு வைத்திருப்பவர்கள் விபத்து காப்பீடாக ரூ.1 லட்சம் வரையிலும் பெற முடியும். 2018 ஆம் ஆண்டில் இருந்து விபத்து காப்பீட்ட்து தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரூபே கார்டு மூலமாக இலவசமாக 30 ஆயிரத்துக்கு காப்பீடு வசதியை பெறலாம்.

Categories

Tech |