பிரேசில் நாட்டில் அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் ரியோ டாஸ் பெட்ராஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்திலிருக்கும் பல பகுதிகளில் அரசினுடைய அனுமதியில்லாமலே சட்டத்திற்குப் புறம்பாக அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவ்வாறு அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடிகளை உடைய அடுக்குமாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மீட்பு குழுவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மாடியில் தங்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் விளைவாக 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இதற்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என்கின்ற சந்தேகத்தின் அடிப்படையில் மீட்பு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.