ஐசிஐசிஐ வங்கியின் சேவை கட்டணமும் ஏடிஎம் விதிகளில் மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான சேவைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதன்படி புதிய சேவைகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அது மட்டுமில்லாமல் பண பரிவர்த்தனை, ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு விதிகளும் மாற்றப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 முறை பணம் எடுத்துக்கொள்ளலாம். நகரில் மூன்று முறை பணம் எடுத்துக்கொள்ளலாம். அதன்பின் எடுக்கப்படும் ஒவ்வொரு பணத்திற்கும் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
நிதி சாரா பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாய் பணம் வசூலிக்கப்படும். இதில் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் இலவசமாக நான்கு முறை பணம் எடுத்துக் கொள்ளலாம். அதன் பின் ஒவ்வொரு முறையும் 150 ரூபாய் கட்டணம் வசூல் செய்த படும். கணக்கு திறக்கப்பட்ட கிளைகளில் மாதம் ஒரு லட்சம் வரை இலவசமாக எடுத்துக்கொள்ள முடியும். அதன் பின் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கு 5 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். மற்ற கிளைகளில் தினம் 25 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு பின் ஏற்படும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 5 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும். வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக 25 காசோலைகள் எடுத்துக்கொள்ள முடியும். அதன்பின் ஒவ்வொரு பத்து காசோலைகளுக்கும் 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.