ISE மற்றும் ICSE செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ISE மற்றும் ISCE செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்த சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் சிஐஎஸ்சிஇ வாரிய தேர்வின் தேர்வுத் தயாரிப்பை தொடங்குவதற்கு பாடத்திட்டங்களை நன்கு புரிந்து கொள்ளுதல், சிறு குறிப்புகள் எடுத்தல், மாதிரி வினாத்தாள்களை எழுதுதல் போன்றவை முக்கிய சிறப்பு அம்சங்களாகும். எனவே 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான போர்டு தேர்வில் வெற்றி பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள உத்திகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.
இந்த தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு புதிய உத்திகளை கையாள வேண்டும். ISE மற்றும் ICSE பாடத்திட்டங்கள் மாணவர்களின் நலனுக்காக குறைக்கப்பட்டுள்ளது. எனவே கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதில் ஏற்படும் சந்தேகங்களை உரிய முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். கேள்விகளின் தன்மை, தேர்வுமுறை, மதிப்பெண் திட்டம், கால அளவு, நுழைவு தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் மொத்த எண்ணிக்கை பற்றி மாணவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
ISE மற்றும் ISCE தேர்வுகளுக்கான பாட வாரியத்தை உள்ளடக்கியுள்ளது. ஒரு கால அட்டவணை தயாரித்து மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி படிக்க வேண்டும். இது தேர்வில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுக்க உதவும். செமஸ்டர் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் சமச்சீர் பாடத் திட்டங்களையும் வைத்திருக்க வேண்டும். ISE மற்றும் ICSE cisce.org என்ற இணையதளத்தில் மாதிரி தேர்வு வினாத்தாள்களை வெளியிட்டுள்ளது.
இந்த மாதிரி வினாத்தாள்களை படித்து மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும். மாணவர்கள் படிக்கும் போது சூத்திரங்கள் மற்றும் பாடத்திட்டங்களை சிறு குறிப்புகளாக எடுத்து வைத்திருக்க வேண்டும். இது தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியஸ்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் தூக்கம், மூளை வேகமாக செயல்படும் தன்மை, தேர்வில் கவனம் செலுத்தும் திறன் போன்றவை அதிகரிக்கும்.