Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில்…! புதிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்…!!!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5வது இடத்தில் உள்ளார்.

இந்தியா ,பாகிஸ்தான் இங்கிலாந்து ,உட்பட சர்வதேச நாடுகளின் ,டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது .  இந்த தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை நியூசிலாந்து அணியில் வீரரான கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார். இதில் இந்திய வீரரான  ரிஷப் பண்ட் 747 புள்ளிகளுடன்,  6வது இடத்தை பெற்றுள்ளார். இதன் மூலமாக  ரிஷப் பண்ட் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களில் இடம்பெற்ற , முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில்,  மிகவும் இக்கட்டான சூழலில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ,அணியை வெற்றி அடைய செய்தார். எனவே இளம் வீரர் ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில், சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அணியின் கேப்டனாக விராட் கோலி 814 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் ,ரோகித் சர்மா 747 புள்ளிகள் எடுத்து 6-வது இடத்தையும் பெற்றுள்ளனர். 2வது 3வது இடங்கள் முறையே சுமித், மார்னஸ் லபுசேன் ஆகியோர் பிடித்துள்ளனர்.

Categories

Tech |