ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்டுதோறும் வெளிவரும் டெஸ்ட் போட்டியின் தரவரிசைப் பட்டியலில், இந்தியா ஒரு புள்ளியை கூடுதலாக பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து 2 புள்ளிகளை கூடுதலாக பெற்று 2வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கிலும் ,இங்கிலாந்தை 3-1 என்று கணக்கிலும் வீழ்த்தியது.
இதுபோல வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில், வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. அடுத்ததாக 3வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் இடத்தை கைப்பற்றிய ,இங்கிலாந்து 3வது இடத்தில் உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா 4 வது இடத்திலும், பாகிஸ்தான் 5வது இடத்திலும் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 6 வது இடத்திலும் உள்ளன. இதைத்தொடர்ந்து 7-வது தென்னாப்பிரிக்கா, 8 வது இடத்தில் இலங்கை மற்றும் 9 வது இடத்தில் வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. கடைசி இடத்தை ஜிம்பாவே அணி பெற்றுள்ளது