ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். இதில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் 3-வது இடத்திலும் இடம்பிடித்துள்ளனர். அதோடு டாப் 10 இடங்களில் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
இதையடுத்து பேட்டிங் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் லபுசேன் முதல் இடத்திலும், இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 2-வது இடத்திலும் உள்ளனர். இதைத் தொடர்ந்து 3-வது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித், 4-வது இடத்தில் கேன்.வில்லியம் ,5-வது இடத்தில் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி 9-வது இடத்தில் உள்ளார்.