ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5-வது இடத்தை பெற்றுள்ளார். அடுத்ததாக ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 6 வது இடத்தை உள்ளனர். தரவரிசையில் 6 வது இடத்தை பிடித்த ரோகித்சர்மா, ரிஷப் பண்ட் இருவரும் 847 புள்ளிகளை பெற்றுள்ளன.
பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியில் தமிழக வீரரான அஸ்வின் 2 வது இடத்தில் உள்ளார். மேலும் டாப் 10 தர வரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரராகவும் அஸ்வின் இருக்கிறார் . இதைத்தொடர்ந்து ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய அணியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவரும் 4-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றனர் . நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 895 புள்ளிகளை பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்