டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் ஜஸ்பிரித் பும்ரா 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதையடுத்து தென்னாபிரிக்க அணியில் கஜிசோ ரபாடா 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதில் ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் ஹாசில்வுட் 7-வது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க் 10-வது இடத்திலும் உள்ளனர்.இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 902 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.
🔺 Jasprit Bumrah into the top 10
🔺 Kagiso Rabada surges upThe pace duo make gains in the latest @MRFWorldwide ICC Men’s Test Player Rankings for bowling 📈
Details 👉 https://t.co/VkBay1CqRn pic.twitter.com/uw0uOgRDQP
— ICC (@ICC) January 5, 2022