ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியில் விராட் கோலி டாப்-10 ல் இருந்து வெளியேறியுள்ளார்.
பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்தது . இதில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது .இந்நிலையில் டி20 தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் குறிப்பாக இந்திய அணியில் விராட் கோலி வரலாறு காணாத அளவு தரவரிசைப் பட்டியலில் சரிவை கண்டுள்ளார் .எப்போதும் 3 வடிவிலான போட்டியிலும் தரவரிசைப் பட்டியலில் டாப்-10 இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் விராட்கோலி இந்த முறை டாப்-10-ல் இருந்து வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் முதலிடத்திலும், தென்னாபிரிக்க அணியில் மார்க்ரம் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 3-வது இடத்திலும் உள்ளனர் .இதையடுத்து 4-வது மற்றும் 5-வது இடத்தில் முகமது ரிஸ்வான் , கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர் .இந்நிலையில் விராட் கோலி 657 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 11-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார் .இதேபோல் ரோகித் சர்மா 13-வது இடத்தைப் பிடித்துள்ளார் .இந்நிலையில் சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி ஓய்வில் இருந்ததால் தொடரில் பங்கேற்க வில்லை. இதனால் தற்போது பேட்ஸ்மேன் தரவரிசையில் டாப்-10 ல் இருந்து வெளியேறியுள்ளார்.