Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை – 2ஆவது இடத்தில் ராகுல் …!!

ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியலை  நேற்று ICC வெளியிட்டதில்பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்திலும் , ராகுல் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

ஐசிசி 20 பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் ராகுல் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல் 4 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்த்துள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தில் உள்ளார். T-20 தரவரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாமும் , 3ஆம் இடத்தில் ஆரோன் பின்ச்_சும் உள்ளனர்.

10 பேர் கொண்ட வீரர்கள்  தரவரிசை பட்டியல் : 

♥ பாபர் அசாம்                     ⇒  பாகிஸ்தான்                 ↔  ரேட்டிங் 879   ♦ தரவரிசை 1

♥ லோகேஷ் ராகுல்         ⇒ இந்தியா                          ↔  ரேட்டிங் 823   ♦  தரவரிசை 2

♥ ஆரோன் பின்ச்                ⇒ ஆஸ்திரேலியா         ↔  ரேட்டிங் 810   ♦  தரவரிசை 3

♥ கோலின் முன்ரோ        ⇒ நியூஸிலாந்து            ↔  ரேட்டிங்  785  ♦ தரவரிசை 4 

♥ டேவிட் மாலன்              ⇒ இங்கிலாந்து               ↔  ரேட்டிங் 782   ♦  தரவரிசை 5

♥ க்ளென் மேஸ்வேல்    ⇒ ஆஸ்திரேலியா          ↔  ரேட்டிங் 766   ♦  தரவரிசை 6

♥ ஏவின் லீவிஸ்               ⇒ வெஸ்ட் இண்டீஸ்    ↔  ரேட்டிங் 702   ♦  தரவரிசை 7

♥ ஹஸ்றதுல்லாஹ்      ⇒ ஆப்கானிஸ்தான்      ↔  ரேட்டிங் 692  ♦  தரவரிசை 8

♥ விராட் கோலி                ⇒ இந்தியா                         ↔  ரேட்டிங் 673   ♦  தரவரிசை 9

♥ ரோஹித் சர்மா             ⇒ இந்தியா                         ↔  ரேட்டிங் 662   ♦  தரவரிசை 10

Categories

Tech |