சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியில் கே.எல்.ராகுல் 729 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் .
அடுத்ததாக இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் 2-வது இடத்திலும் ,தென்னாபிரிக்க அணியில் மார்க்ரம் மூன்றாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன. இதைதொடர்ந்து இந்திய அணியின் விராட் கோலி 11-வது இடத்திலும், ரோகித் சர்மா 13-வது இடத்திலும் உள்ளனர்.