Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்: தரவரிசை பட்டியலில் …. மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம் ….!!!

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 4 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்ளார்.  இதைதொடர்ந்து ஹர்மன்ப்ரீத் கவுர் 3 இடங்கள் முன்னேறி முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து உள்ளார்.

இதையடுத்து தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முதலிடத்திலும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன்  மிதாலி ராஜ் 2-வது இடத்திலும் தொடர்ந்து  நீடிக்கின்றனர்.
அதே போல் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை  தீப்தி ஷர்மா 5-வது இடத்தில் உள்ளார்.இதையடுத்து பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி 4-வது  நீடிக்கிறார்.

Categories

Tech |