ஐசிசி மகளிர் ஒருநாள் தொடருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் மிதாலி ராஜ் மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார் .
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டனான மிதாலி ராஜ் 562 புள்ளிகள் எடுத்து மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார் .சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் (72, 59, 75 )அடித்து விளாசியதன் மூலமாக மீண்டும் ‘நம்பர் ஒன் ‘இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் முதலாக ‘நம்பர் ஒன் ‘இடத்தை பிடித்திருந்தார்.
இதன் மூலம் 8 -வது முறையாக முதல் இடத்தை அலங்கரித்து உள்ளார். இவரைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா வீராங்கனை லிசல் லீ 758 புள்ளிகளை எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மூன்று வகையான போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் தரவரிசை பட்டியலில் மிதாலி ராஜ் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.