ஐசிசி மகளிர் ஒருநாள் தொடருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீராங்கனை லிசெல் லீ முதலிடத்துக்கு முன்னேறினார் .
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தர வரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் 762 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் .இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனை லிசெல் லீ 762 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் உடன் இணைந்து நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.
இதன் மூலம் அவர் 3-வது முறையாக முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா வீராங்கனை அலிசா ஹீலி 756 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இந்திய வீராங்கனை மந்தனா 701 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளனர் .