Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி-யின் மார்ச் மாத விருது பட்டியலில் …இடம்பிடித்த வேகப்பந்து வீச்சாளர் ‘புவனேஷ்வர் குமார்’ …!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக வழங்கப்படும், விருதுகளுக்கான பட்டியலில்  இந்திய கிரிக்கெட் அணி வீரரான புவனேஷ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

இந்த விருதுக்கான பட்டியலில் இந்திய அணி வீரர்கள் மட்டுமல்லாது, அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் இந்த பட்டியலில் இடம் பெறுவர் .அதன்படி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ,ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பாக பவுலிங்  செய்ததற்காக ,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார்  விருது பட்டியல் இடம்பிடித்தார். இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான், ஜிம்பாப்வே கேப்டனான  சீன் வில்லியம்ஸ்ஆகிய இருவரும் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதுபோலவே மகளிருக்கான கிரிக்கெட் அணியில் ,இந்திய வீராங்கனைகள் பூனம் ரவுத்,  ராஜேஸ்வரி கெய்க்வாட் மற்றும்  தென்ஆப்பிரிக்கா  கிரிக்கெட் அணியின் வீராங்கனையான    லிசல் லீ ஆகிய வீராங்கனைகள் ஐசிசி விருது பட்டியலில்  இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில்  விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட  ஒரு வீரர், வீராங்கனையை ,ஐ.சி.சி வாக்கு அகாடமி  மற்றும் ரசிகர்கள் வாக்களித்த எண்ணிக்கை அடிப்படையில் ,விருதுக்கான வீரர்களை தேர்வு செய்யப்படுவார்கள்.

Categories

Tech |