சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் 2 மற்றும் 3-வது போட்டிகளில் சதம் அடித்தார். இதில் 3-வது போட்டியில் பாபர் அசாம் 105 ரன்கள் அடித்து குவித்ததன் வாயிலாக சர்வதேச ஒருநாள் போட்டியில் தன் 16வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த நிலையில் ICC வெளியிட்டுள்ள ஆல்டைம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில், பாபர்அசாம் 15வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
இதன் வாயிலாக 16-வது இடத்திலிருந்த சச்சின் டெண்டுல்கரை அவர் பின்னுக்கு தள்ளிஉள்ளார். இப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் முதல் இடத்திலும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகீர் அப்பாஸ் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் 3வது இடத்திலும் இருக்கின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி 6-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.