Categories
கால் பந்து விளையாட்டு

மாரடைப்பிலிருந்து மீண்டு அணிக்கு திருப்பிய கேப்டன்… ரசிகர்கள் உற்சாகம்..!!

ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த இக்கர் காசிலாஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக தனது கிளப்பான போர்டோவுடன் இணைந்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை வழிநடத்தி உலகக்கோப்பையை பெற்று தந்தவர் இக்கர் காசிலாஸ். இவர் ஆறு மாதங்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பால் பாதிப்படைந்தார்.

Image result for Iker Casillas

அப்போது பாதிக்கப்பட்ட காசிலாஸை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவர் ஒரு இருதய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் விளையாடிவந்த கால்பந்து கிளப்பான போர்டோ ஒரு அறிக்கையை வெளியிட்டது.

Image result for Iker Casillas

அதன் பின் தற்போது காசிலாஸ் மீண்டும் போர்டோ கிளப்புடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருவதாக அந்த அணி தெரிவித்துள்ளது. மேலும் அவர் 2019-20 ஆம் சீசனுக்கான பிரீமியர் லிகா அணியிலும் இடம்பிடித்துள்ளதாக போர்டோ கிளப் தெரிவித்துள்ளது. இத்தகவலை அறிந்த கால்பந்து ரசிகர்கள் காசிலாஸுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Categories

Tech |