Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

எந்த விருது வாங்கினாலும் இவருக்குத்தான் சமர்ப்பிப்பேன்…. தேசிய விருது பெற்ற அசுரன் பட இயக்குனர் பேச்சு…!!

நான் எந்த விருது வாங்கினாலும் பாலுமகேந்திராவுக்கு தான் சமர்ப்பிப்பேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு ஆளுயர மாலையை இயக்குனர் வெற்றிமாறனுக்கு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தேசிய விருது கிடைத்தது குறித்து வெற்றிமாறன் கூறியதாவது, அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகப்பெரிய ஊக்கமளிக்கிறது.

வெற்றிமாறன், தாணு

அசுரன் திரைப்படம் சமூக நீதிக்கான கதை. இக்கதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது எண்ணம்.தற்போது இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. நான் எந்த விருதை வாங்கினாலும் அதை பாலுமகேந்திராவுக்குதான் சமர்ப்பிப்பேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |