சினிமாவில் பொதுவாக பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து கூறியுள்ளார்கள். இந்த பாலியல் புகாரில் பிரபலமான நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் கூட சிக்கியுள்ளனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பதாக நடிகைகள் அனைவரும் கூறுவது உண்மையா என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு என்னுடைய சக நடிகைகள் பாலியல் தொல்லை பற்றி என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் அது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடக்கவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். இதுவரை யாரும் என்னை அந்த மாதிரி கண்ணோட்டத்தில் அணுகவில்லை. ஒருவேளை யாராவது பாலியல் ரீதியில் என்னை படத்தில் அணுகினால் அந்த படமே வேண்டாம் என்று உதறி தள்ளி விடுவேன். மேலும் சினிமாவை விட்டு விலகி வேறு வேலைக்கு சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார்.