அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் நான் ராஜினாமா செய்ய வேண்டுமா அதற்க்கு என்ன தேவை இருக்கிறது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசியலில் தொடர்ந்து நிலவிவரும் சிக்கல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன , இந்த ஆட்சியை தக்க வைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசித்ததாக தெரிகின்றது. அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் இந்த கூட்டம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமியிடம் அமைச்சர் ராஜினாமாவை தொடர்ந்து நீங்கள் ராஜினாமா செவீர்களா என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த குமாரசாமி , நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கான தேவை என்ன உள்ளது. கடந்த 2009- 2010-ம் ஆண்டுகளில் எடியூரப்பா என்ன செய்தார். அவருக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை. ஆனால் தற்போது நான் மட்டும் ராஜினாமா செய்ய வேண்டுமா?. வேண்டுமானால் எடியூரப்பா ராஜினாமா செய்யட்டும்’’ என்று கூறினார்.