பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இனி அவர் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட போவதில்லை என்று கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான “ராதே” திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் கடந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டு 249 ரூபாய் கட்டணம் செலுத்தி இப்படத்தைப் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ராதே திரைப்படம் அமையாததால் இத்திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.
இதற்கிடையில் ரசிகர்கள் பலரும் இப்படத்தை திருட்டு இணையதளத்தில் பார்த்ததினால் சல்மான் கானும் மிகவும் கோபமடைந்தார். இந்நிலையில் சல்மான்கான் அதிரடி முடிவை ஒன்றை எடுத்துள்ளார் அதன்படி தன்னுடைய படங்களை இனி ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதில்லை. திரையரங்கில் மட்டுமே வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.