Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் வம்புக்கு போகல…! அவரு தான்…. ”பி.ஹெச்.டி படிச்சியா” ”நோபல் பரிசு வாங்கினியா”ன்னு கேட்குறாரு… செம பொடுபோட்ட அண்ணாமலை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, கருத்தியலை கருத்தியல் அடிப்படையால் எதிர்கொள்ள வேண்டும். அதாவது எக்கனாமி பத்தி பிடிஆர் விவாதத்தில் பேசியுள்ளார். தமிழ்நாடு மட்டும் 55 சதவீதம் வளரவில்லை. மகாராஷ்டிரா 68 சதவீதம் வளர்ந்திருக்கிறது, கேரளா 68 சதவீதம் வளர்ந்திருக்கிறது, குஜராத் 50 சதவீதம் வளர்ந்து இருக்கிறது.

முதல் காலாண்டில் தமிழ்நாட்டை விட உத்திர பிரதேசத்தின் நிகர வருமானம் அதிகமாக இருக்கிறது. இதுக்கு பதில் சொல்லணும். திராவிட மாடல்  என்று சொல்லுகின்றார்கள். யூ.பி பின்தங்கிய மாநிலம் என்று சொல்கின்றார். இதுக்கு பதில் சொல்லணும்  உத்தரபிரதேசம் சரியில்லை என்று நீங்கள் வாதம் பண்றீங்க. அப்படி இருக்கும்போது யூ.பி உடைய நிகர வருமானம் அரசாங்கத்தோட சொந்த வருமானம் எப்படி தமிழ்நாட்டை விட அதிகமா இருந்துச்சு ? இதையெல்லாம் நாம்  ஆரோக்கியமா விவாதிக்கலாம், விவாதம் பண்ணலாம்.

திராவிட மாடல்  என்பது ஒரு நல்ல  மாடலா என பேசலாம். திராவிட மாடல் என்பது இருக்கிறது.  அதையெல்லாம் விட்டுட்டு, நீ பி.எச்.டி. படிச்சியா, நீ நோபல் பரிசு வாங்கினியா? அப்படிங்கிற கேள்விக்கு உச்ச நீதிமன்றமே குட்டு வைத்திருக்கிறது. அதனால் என்னை பொறுத்தவரை நான் மிகவும் தெளிவாக இருக்கின்றேன். அண்ணா   நாம் அரசியல் வந்திருப்பது நியாயமாக, நேர்மையாக சுத்தமான அரசியல் செய்ய வேண்டும் என்று.

இந்த சாக்கடை அரசியலுக்குள் செல்ல கூடாது என்பதில் மிக  தெளிவாக நானும் இருக்கேன், கட்சியும் இருக்கு. ஆனா நேத்து அவர் போட்ட டுவிட்டுக்கு  என்ன அர்த்தம்னு நீங்க  பாருங்கள் நான் போட்ட பதிலடியும் நீங்கள் பாருங்கள். என்னை பொறுத்தவரை அவர் பேசியிருந்ததுக்கு நான் பேசி இருந்தேன் தவிர அவரை நான் எந்த காரணத்திற்கும் வம்புக்கு இழுக்க வில்லை  என கூறியுள்ளார்.

Categories

Tech |