பிரபல நடிகை சாய் பல்லவி இயக்குனர்களிடம் கறாரான கண்டிஷன்களை போட்டு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இதை தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் சில கண்டிஷன்களை போட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளத.
அது என்னவென்றால் தான் இனி தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் மட்டுமே நடிப்பேன் என்றும் பாடல்களில் ஆடுவது மற்றும் நான்கு காட்சிகளில் மட்டும் நடித்து விட்டுப் போவது என்றெல்லாம் இனி நான் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தன் ரசிகர்களின் விருப்பமும் அதுவே என்று கூறிய அவர் அப்படி ஒரு கதை இருந்தால் மட்டும் என்னிடம் சொல்லுங்கள் என்று இயக்குனர்களிடம் மிகவும் கறாராக பேசியுள்ளார்.