விஜய்க்கு அம்மாவாக நடிப்பீர்களா என கேட்ட போது, அதற்கு நோ என சிம்ரன் கூறியுள்ளார்.
சிம்ரன் தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர். இவர் தமிழில் அஜீத், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில், இவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் சில நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்தார். அதன்படி, ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யாவிற்கு இவர் அம்மாவாக நடித்திருந்தார். மேலும், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்திலும் அம்மாவாக நடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சூர்யாவுக்கு அம்மாவாக நடித்து விட்டீர்கள். நீங்கள் விஜய்க்கு அம்மாவாக நடிப்பீர்களா என கேட்ட போது, அதற்கு நோ என சிம்ரன் கூறியுள்ளார். மேலும், விஜய் ரசிகர்கள் கூட இதனை விரும்ப மாட்டார்கள் எனவும் சிம்ரன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.