தேசியக்கடி அவமதிப்பு வழக்கில் எஸ்.வி சேகர் தன்னுடைய குற்றத்தை உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
நடிகர் எஸ்வி சேகர் தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தற்பொழுது ஒரு திருப்புமுனை வந்துள்ளது. அதாவது இந்த அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த விசாரணையில் நடிகர் எஸ்வி சேகர் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், முதலமைச்சர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் தான் தன்னுடைய வாழ்நாள் முழுதும் இனி ஒருபோதும் இவ்வாறு தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். ஆனால் அதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யக் கூடாது என்றும் இடைக்கால தடை விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.