Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தருகிறேன்”…. மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி… போலீசார் அதிரடி….!!!!!

வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தையடுத்த மணவாள நகரை சேர்ந்த பொரியல் பட்டதாரியான பிரசாந்த் என்பவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது ஓசூரில் இருக்கும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் வேலை வேண்டி விண்ணப்பத்தை ஆன்லைனில் பார்த்ததாகவும் உங்களுக்கு எங்களிடத்தில் சேர அனைத்து தகுதிகளும் இருக்கின்றது. ஆகையால் உங்களது சான்றிதழ்கள் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் எனக் கூறியுள்ளார். பிரசாந்த் சான்றிதழ்களை அவர்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தார். பின் தொடர்பு கொண்ட அந்தப் பெண் உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால் டாக்குமெண்ட் கட்டணம், பதிவு கட்டணம், செயலாக்க கட்டணம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பணம் செலுத்த வேண்டும் என கூறினார்.

இதை பிரசாந்த்-ம் நம்பி கூகுள் பே, வாங்கி கணக்கு ஆகியவைக்கு 2 லட்சத்து 33 ஆயிரத்து 250 வரை செலுத்தியுள்ளார். அந்த நிறுவனத்தில் இருந்து அவருக்கு அழைப்பானை மற்றும் வேலையில் சேருவதற்கான ஆணை அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் சென்ற ஒன்றரை வருடங்களாக வேலையில் சேர்வதற்காக எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்ட பொழுது கொரோனா காலம் என்பதால் வேலை கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் சிறிது காலம் கழித்து வேலை தருவதாக கூறி காலதாமதம் செய்து வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பிரசாந்த் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மோசடியில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சந்தீப் என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவரை பிடிக்க முயற்சி செய்தார்கள். அவர் ஸ்ரீபெரும்புதூரில் பதுக்கி இருந்தது தெரியவந்தது. சந்தீப்பை கைது செய்தார்கள். மேலும் அவரிடம் இருந்த இரண்டு செல்போன்கள் 4 சிம் கார்டுகளை பறிமுதல் செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தார்கள். இந்த மோசடியில் ஈடுபடுவதற்கு அவருக்கு உதவியாக இருந்த சந்தீப்பின் 2-வது மனைவி லாவண்யா தற்போது தலைமுறைவாக இருக்கின்றார். அவரை போலீசார் தேடி வருகின்றார்கள். மேலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.

Categories

Tech |