செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்கள் எந்த சாதி யாராக இருங்கள் என் இறைக்கு முன்பு என் மொழியில் வழிபாடு இதுதான் எங்களுடைய கோரிக்கை, கோட்பாடு கோரிக்கை என்று சொல்ல நான் தயாராக இல்லை என் உரிமை. இது அப்போ என் வழிபாட்டில் இருந்து என் மொழியை காக்க வேண்டும்.
நிறைமொழி மாந்தர் ஆணையில் கிடந்த மறைமொழி தானே மந்திரம் தானே – என்று தொல்காப்பியம் பாடுகிறது, இதுதான் மந்திரம். இப்போது எங்களை தாண்டி இங்கே ஒன்னும் மந்திரம் கிடையாது. உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், அமித்ஷா அவர்கள் சொல்கிறார்கள் தாய் மொழியில் கைவிட்டு விடாதீர்கள் என்று… விடக்கூடாது என்று தமிழ் மொழி பிள்ளைகள் நிற்கிறோம்.
திரு மோடி அவர்கள் சொல்கிறார் இந்த நாட்டில் முதன்மை அமைச்சர் உலகம் மொழிகளில் தொன்மையான மொழி தமிழ் அது இந்தியாவில் இருப்பது எங்களுக்கு பெருமை என்று, இந்திய மொழிகளின் தொன்மை தமிழில் இருந்து அறியலாம் என்கிறார்.அந்த தொன்மையான மொழிக்கு நீங்கள் தந்திருக்கும் முன்னுரிமை என்ன ? அதுதான் நாங்கள் எழுப்புகின்ற கேள்வி.
இது என்னவென்றால் 63 நாயன்மார்கள் எங்களுடைய நாயன்மார்கள், இவர் தமிழை தவிர வேற எந்த மொழியில் எந்த இனத்தை சார்ந்தவர்கள். 12 ஆழ்வார்கள் தாய் மொழி தமிழைத் தவிர வேறு எதில் பாட்டு இருக்கிறது. ஆண்டாளுடைய பாசரங்கள் தமிழில் இருக்கிறதா ?வேறு மொழியில் இருக்கிறதா? ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கின்ற அவளுடைய கோவிலுக்குள்ளேயே அவர்களுடைய பாசுரங்கள் பாடப்படுவதில்லை, என்பது எவ்வளவு பெரிய கொடுமை துரோகம் என்பது அறிவார்ந்த தமிழ் சமூக மக்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழ் பேரறிஞர்கள், தமிழ் இளம் தலைமுறையினருக்கு இது புரியனும். உன் தாயை அம்மா என உன் தாய் மொழியில் அழைக்காமல், என்ன கொடுமை ? ஆண்டாள் அவள் பாடிய பாசுரத்தையே அவருக்கு முன்பு பாட முடியாத ஒரு கொடுஞ்சூழல் என் இன மக்களுக்கு இருக்கிறது, என்பதுதான் பெரிய கொடுமை என வேதனை தெரிவித்தார்.