அமமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், எனக்கு உண்மையிலேயே பதவி ஆசை இருந்தால், ஏற்கனவே 2001 இல் முதலமைச்சர் பதவி பெறக்கூடிய இடத்தில் நான் இருந்தவன், எனக்கு எப்பவுமே ஒரு சுபாவம். நாமாக போராடி, உழைத்து வெற்றி பெற்று தான் எந்த பதவிக்கும் செல்ல வேண்டும். இன்றைக்கு ஒன்றை சொல்கிறேன், அம்மா அவர்களிடம் நமக்கு இருந்த அந்த உறவிலே, நட்பிலே, நான் ராஜ்ஜியசபா எம்.பியாகவே ஆகி இருக்க முடியும்.
இருந்தாலும் பாராளுமன்ற தேர்தலில் அம்மா அவர்கள் என்னை முதன் முதலாக வேட்பாளராக அறிவித்தது தான், நான் அரசியலில் அடி எடுத்து வைத்தேன். நான் அம்மா அவர்களிடம் வைத்த கோரிக்கை அது, அம்மா அவர்கள் என்னை அரசியலுக்கு கொண்டுவர வேண்டுமென்று முடிவெடுத்த போது, நான் தேர்தல் அரசியல் மூலம் வந்தால் தான் உங்களுக்கும் நல்லது, எனக்கும் நல்லது அம்மா என்று சொன்னேன்.
அதனால்தான் அன்றைக்கு பெரிய குளத்தில் திரு.சேடப்பட்டி முத்தையா அவர்களுக்கு அம்மா அவர்கள் வாய்ப்பு கொடுக்க முடியாது என்று, எண்ணி இருந்த காரணத்தினால்தான் அந்த இடத்தில் போட்டியிட்டேன். அப்ப கூட இன்னொருவரை அடித்து விட்டு வர வேண்டும் என்று நினைக்கவில்லை, ஏனென்றால் உங்களுக்கு தெரியும் சேடப்பட்டி முத்தையா பாராளுமன்ற ஓட்டெடுப்பில் அவர் மீது சந்தேகம் இருந்தததால் அவருக்கு அம்மா சீட்டு கொடுக்க வேண்டாம் என்று முடிவுக்கு வந்தார்கள். அந்த தொகுதியில் தான் நான் நின்றேன், நான் ஒன்றும் தஞ்சாவூரில் கேட்டு, நிற்கவில்லை என பேசினார்.