Categories
சினிமா தமிழ் சினிமா

“திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன்”…. நடிகை திவ்யா உருக்கம்….!!!!!!

திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன் என நடிகை திவ்யா கூறியுள்ளார்.

கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் கர்ப்பிணியான என்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தன்னை மதம் மாற கட்டாயப்படுத்துவதாகவும் திவ்யா புகார் கொடுத்தார்.

இதனால் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் அனைத்து மகளிர் போலீஸ்சார் அர்னவ்வுக்கு சம்மன் அனுப்பினார்கள். ஆனால் கண்ணில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் 18-ம் தேதி ஆஜராவாதாவும் வக்கீல் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் படப்பிடிப்பு தளத்திலிருந்து அர்னவ்வை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தார்கள். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

அவரை வரும் 28ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனால் நடிகர் அருனவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகை திவ்யா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, திருந்தி வந்தால் நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால் அதை அர்னவ்வின் பெற்றோர் வந்து கூற வேண்டும். ஏனென்றால் அவர் பெற்றோர் பெயரை சொல்லித்தான் என்னை தவிர்த்தார். அவர் என்னுடன் வாழ்கிறேன் என சொன்னாள் மட்டும் போதாது. அது மாதிரி வீட்டில் நடந்து கொள்ள வேண்டும். அவர் வீட்டில் ஒரு மாதிரியும் வெளியில் ஒரு மாதிரியும் இருக்கின்றார். அவர் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று, எல்லாம் பொய் எனக் கூறியிருக்கின்றார்.

Categories

Tech |