மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகுமார் மற்றும் அவரது மனைவி ஆஷா (வயது 41) திருவனந்தபுரம், பாரசாலா அருகேயுள்ள உதயங்குளக்காரா பகுதியில் வசித்து வந்தனர். சென்ற வியாழக்கிழமை கட்சி அலுவலகம் செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து ஆஷா சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவே இல்லை. இதை அறிந்த, உறவினர்கள் கட்சி அலுவலகம் சென்று பார்த்த போது, கட்சி அலுவலக கட்டிடத்துக்குள் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
“உள்ளுர் தலைவர்கள் ராஜன், ஜாய் ஆகியோர் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகின்றனர். மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன். என்னை டார்ச்சர் செய்வது குறித்து கட்சியின் மேல்மட்டத் தலைவர்களுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” இவ்வாறு ஆஷா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக ஒரு கடிதத்தை எழுதிவத்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள் ஆஷாவின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர் அதன்பிறகு காவல்தறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து, கேரள எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில், ” நேர்மையான டி.ஜி.பி ஒருவரை வைத்து இந்த வழக்கை விசாரித்து உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சிக்குள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி பெண் தொண்டர்கள் குறி வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பெண் தன் நிலை குறித்து மேல் மட்டத் தலைவர்களுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த தற்கொலை கேரளப் பகுதி முழுவதையும் பரபரப்பாக்கியுள்ளது