Categories
சினிமா தமிழ் சினிமா

இவர் நடிப்பை கண்டு மிரண்டு விட்டேன்…. யோகிபாபுவை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்…!!!

மண்டேலா படத்தை பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் யோகிபாபுவுக்கு வீடியோகால் மூலம் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

மடோன் அஷ்வின் இயக்கத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. இத்திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்படம் வெளியானதால் இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ரசிகர்களும், திரைப்பிரபலங்கள் இப்படத்தின் குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியும்  மண்டேலா திரைப்படத்தை பாராட்டியுள்ளார். மேலும் யோகிபாபுவிற்க்கு அவர் வீடியோ கால் செய்து வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

மேலும் மண்டேலா திரைப்படம் குறித்து ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில், சில நாட்களுக்கு முன் தான்நெட்ஃபிளிக்ஸில் மண்டேலா திரைப்படம் பார்த்தேன். யோகி பாபுவின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். என்ன ஒரு கதை. அவர் நடராஜரின் நண்பன் என்பது எனக்கு தெரிந்தது. அதனால் அவர் என்னை யோகி பாபுவிடம் பேச வைத்தார் என்று பதிவுசெய்துள்ளார்.

Categories

Tech |