Categories
மாநில செய்திகள்

விஷவாயு காரணமாக பலர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்: முதல்வர் பழனிசாமி!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன் என அவர் கூறியுள்ளார். விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

காற்றில் கலந்து பரவிய விஷ வாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விரைந்தார். விஷவாயு காரணமாக ஏராளமான கால்நடைகள் மரணம் அடைந்துள்ளன.

Categories

Tech |