Categories
சினிமா தமிழ் சினிமா

ராஷ்மிகாவை பார்த்து அசந்து போயிட்டேன்…. நடிகர் கார்த்தி பேட்டி…!!

ராஷ்மிகா மந்தனாவை பார்த்து அசந்து போனதாக கார்த்தி பேட்டி அளித்துள்ளார்.

முன்னணி நடிகர் கார்த்தி நடித்து வரும் படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினான ராஷ்மிகா குறித்து நடிகர் கார்த்தி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, “சுல்தான் படத்தில் எனக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ராஷ்மிகா சரியான விளையாட்டு தனமும், சுட்டி தனமும் கொண்டவர். அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஆனால் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்திற்காக காத்திருந்து தற்போது இப்படத்தில் நடித்துள்ளார்.

மிகவும் சுட்டித்தனமான அவர் சாட்டுக்குள் வந்ததும் கேரக்டராகவே மாறி சரியாக வசனம் பேசி அசத்தி விடுவார். இதை கண்டு நான் மலைத்துப் போய் விடுவேன். ஆனால் கண்டிப்பாக ராஷ்மிகாவிற்கு இந்திய சினிமாவில் பெரிய எதிர்காலம் உள்ளது” என்று கார்த்தி கூறியுள்ளார்.

Categories

Tech |