ஆர்ப்பாட்டத்தில் பேசிய துறை வைகோ, ஹிந்தியை திணிக்க நினைத்தால், வரலாறு திரும்பும் என்பதை எச்சரிக்கை விடுக்கிறேன், மத அரசியல் செய்து கொண்டிருந்த இந்த சனாதன சக்திகள் இன்று மொழி அரசியலை கையில் எடுத்திருக்கின்றார்கள். ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் நீங்கள் கல்வி கற்கலாம், அதை நாங்கள் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். ஆனால் ஆறாம் வகுப்பு முதல் அந்த தாய் மொழியை தவிர்த்து ஒரு இந்திய மொழியை மாணவர்கள் கண்டிப்பாக கற்க வேண்டும் என்பது அதுதான் சர்ச்சை.
படிக்கின்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எது இரண்டாம் மொழி என்று… அதில் தலையிட அமித்ஷாவிற்கோ, வி.எச்.பிக்கோ, ஆர்எஸ்எஸ்கோ, பஜரங்தல்கோ எந்த உரிமையும் கிடையாது. ஆங்கிலம் அடிமை சின்னத்தின் சாட்சியம். அதனால் ஆங்கிலம் இல்லாத ஒரு பாரதத்தை உருவாக்குவோம் என்ற கருத்தினை விதைக்கிறார்கள் போலி தேசியவாதிகளும், தமிழ் துரோகிகளும்.
இன்றைக்கு இணையத்திற்கு சென்றால், இது போன்ற பல கருத்துக்களை நீங்கள் பார்க்கலாம், ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை கொண்டு வர வேண்டும், நாட்டில் முன்னேற்றத்திற்கு ஹிந்தி வேண்டும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஹிந்தி வேண்டும் என்று பிதற்றுகிறார் அமித்ஷா. ஹிந்தி பேசினால் தான் முன்னேற்றம் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்கள் ஏன் முன்னேறவில்லை ?
ஆங்கிலம் தவிர்க்க முடியாத இணைப்பு மொழியை என்பதை உணர்ந்து, ஆங்கிலத்தில் வரவேற்கும் போது இந்தியா மட்டும் இப்போது ஆங்கிலத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாடு எடுத்தால் நமது மாணவர்களின் எதிர்காலம் சூலியம் ஆகிவிடும். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல, மொழி திணிப்புக்கு தான் நாங்கள் எதிரிகள், வேறு யாருக்கும் இல்லை. மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள் அந்த முடிவை மாணவர்களுக்கு விட்டுவிடுங்கள், நீங்கள் திணைக்காதீர்கள் என்பதுதான் திராவிட இயக்கங்கள் காலம் காலமாக சொல்லி வருகின்றது என தெரிவித்தார்.