Categories
உலக செய்திகள்

தம்பி பாப்பா வேணாம்… தங்கை தான் வேணும்.. பார்ட்டியில் ஏமாற்றமடைந்த குழந்தை…வைரலாகும் வீடியோ…!

குழந்தையின் பாலினத்தை சொல்லும் நிகழ்ச்சியில் தந்தைக்கு பட்ட அடியும், சிறுமிக்கு கிடைத்த ஏமாற்றமமும் வருத்தமளித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை கர்ப்பிணியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் வெளிநாடுகளில் அப்படி கிடையாது. கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை தெரிந்து கொண்டு அதனை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். சிலர் தங்கள் வசதிக்கேற்ப பார்ட்டி ஏற்பாடு செய்து உறவினர்கள்,நண்பர்கள் என தெரிந்தவர்களை அழைத்து விருந்து வைத்து மகிழ்வர்.

சிலர் வீட்டில் இருப்பவர்கள் உடனே கொண்டாடி மகிழ்வர். அதில் பலூன் மூலம் குழந்தைகளின் பாலினத்தை சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும். பிங்க் நிறம் பலூன் பெண் குழந்தையையும், நீலநிற பலூன் ஆண் குழந்தை யையும் குறிக்கும். அதனைப் போலவே இங்கு ஒரு குடும்பமும் கொண்டாடியுள்ளது.

ஜெம்மா பேலிஃப் நியூபி என்பவர் தனது யூடுப் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில் அவர் தன் மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும் நிகழ்ச்சி பதிவிட்டிருந்தார். முதலில் பார்ட்டி பூப்பரை தவறான டைரக்சனின் பிடித்த அவருக்கு படக்கூடாத இடத்தில் அடிபட்டு விட்டது. அதனை சமாளித்து தன் முதல் குழந்தையிடம் பெற்றோர்கள் கலர் பலூன்கள் எந்த குழந்தையை குறிக்கும் என்று தெளிவுபடுத்தினார்.

அதன்படி நீல நிற பலூனை தாயார் காட்டினார். ஆனால் அதனைக் கண்ட குழந்தை உடனே ஓடிப் போய் சோபாவில் அமர்ந்து அழுதது. அதன்பின் தன் தாயாரை கட்டி அணைத்து தனக்கு தம்பி பாப்பா வேண்டாம். தங்கை தான் வேண்டும் என்று அழுது கூறினார். இருப்பினும் ஒன்றும் செய்ய முடியாத நிலைமையில் பெற்றோர்கள் குழந்தை சமாளித்தனர். யூடிபில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ ஒரு லட்சம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Categories

Tech |