Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓடிடி தளங்களை ஆதரிக்கிறேன்…. ரகுல் பிரீத் சிங் பேட்டி…!!!

முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங் ஓடிடி தளத்தை ஆதரிப்பதாகக் கூறி உள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் ரசிகர்களின் பார்வை ஓடிடி பக்கம் திரும்பியுள்ளது. ஆகையால் ஓடிடியில் வெளியாகும் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் நடிகர்கள், நடிகைகள், மற்றும் இயக்குனர்களுக்கும் அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. ஓடிடி தளத்தின் மூலம் வெளியாகும் படங்கள் உலக அளவில் பார்க்கப்படுகிறது. மேலும் நல்ல கதையம்சமாக இருந்தால் பாராட்டவும் படுகிறது. இதேபோல் சினிமாவோடு ஓடிடி தளமும் படிப்படியாக முன்னேறினால் சினிமாத்துறை மேலும் சிறப்பாக இருக்கும். ஆகவே நான் ஓடிடி தளங்களை ஆதரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |