Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் நண்பரின் சரியான முடிவுக்காக துணை நிற்கிறேன்: சச்சின்

’புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ்’ போட்டிக்காக தனது நண்பர் பாண்டிங்கின் சரியான முடிவுக்காக துணை நிற்கிறேன் என சச்சின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் வனவிலங்குகள் கணக்கிட முடியாத அளவிற்கு பாதிப்புகளை சந்தித்துள்ளன. அதுமட்டுமின்றி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, காட்டுத் தீயால் உருக்குலைந்த ஆஸ்திரேலியாவுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஏராளமான பிரபலங்கள் உதவி செய்துவரும் நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ் என கிரிக்கெட் போட்டி நடத்தவுள்ளனர். அதில் வரும் அனைத்து தொகையும் காட்டுத் தீயால் பாதிக்க்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பாண்டிங் மற்றும் வார்னே ஆகியோரின் தலைமையின் கீழ் முன்னாள், ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த அணிக்கான பயிற்சியாளர்களாக இந்திய பேட்டிங் லெஜண்ட் சச்சின், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் வால்ஷும் களமிறங்கவுள்ளனர்

இதற்காக ரிக்கி பாண்டிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ” புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டிக்காக சச்சின் வரவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. சரியான நேரத்தில் பயிற்சியாளராகவும் களமிறங்கவுள்ளார்” என பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்த சச்சின், ”சரியான முடிவினைத் தேர்ந்தெடுத்துள்ளதோடு, எனது நண்பரின் சரியான முடிவுக்காக துணை நிற்கிறேன். காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இந்த புஷ் ஃபயர் கிரிக்கெட் மூலம் சில நிவாரணங்கள் செல்லும் என நம்புகிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |