அரசு எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த காரணத்தால் உயிர்சேதம் குறைந்துள்ளது.
கடலூரில் நிவர் புயல் பாதிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இன்றைக்கு டிவியில் பாத்தீங்கன்னா… ஒருவர் நடந்து போய் கிட்டு இருக்காரு, புயலடித்து ஓய்ந்த 6 மணி நேரம் கழித்துதான் வெளியே போகணும் என்று சொல்கிறோம். ஆனால் புயல் அடிக்கும் போதே போறாரு. அப்போது மரம் சரிந்து அவர் மேலே விழுகின்றது. அவர் இறந்து போகின்றார்.
மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கையாக தான் நங்கள் செய்கின்றோம். எனவே மின்சாரம் நிறுத்த வேண்டும் என்று கிடையாது, மக்களுக்கு எவ்வித சிரமம் இருக்கக் கூடாது, உயிர்ச்சேதம் ஏதும் இருக்கக்கூடாது என்பதற்கு தான் இந்த முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக பாடம் கற்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்கிறாரே… என்ன பாடம் கற்க வேண்டும் ? புயல் அடிக்கும்னு சொல்றாங்க. அந்த புயல் எப்படி எதிர்கொள்வது, அதிலிருந்து எப்படி மக்களை பாதுகாப்பது ? என்பது தான் அரசு எடுத்த நடவடிக்கை. இது சரியான முறையில் செய்த காரணத்தால்தான், உயிர் சேதம் குறைக்கப்பட்டுள்ளது. பொருட் சேதமும் இல்லை என முதல்வர் தெரிவித்தார்.