Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

பிரதமரின் பொது நிவாரண நிதி : பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரூ 25,00,00,000 அறிவிப்பு!

பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி நிதி அறிவித்தார் பாலிவுட் நடிகர் அக்சய் குமார்

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதன் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றது. அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது தொழிலை நடத்த முடியாமல் கிடக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசும், மத்திய நிதி அமைச்சகமும் பல்வேறு சலுகைகளை அறிவித்தன.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தங்களால் இயன்ற நிதி உதவியை அளிக்க வேண்டுமென ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பேரிடர்களின் போது மக்களை காக்க இது போன்ற நிதியுதவிகள் உதவும் என்று கூறிய பிரதமர் மோடி, நிதியளிக்க வேண்டிய வங்கி கணக்கு எண்ணையும் தெரிவித்திருந்தார்.

Akshay Kumar pledges to donate Rs 25 crore in PM cares fund to ...

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், நெருக்கடியான தருணத்தில் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் வேண்டுகோளை அடுத்து முதல் நபராக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நிதி வழங்குவதாக அறிவித்தது வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |