அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரின் குழந்தை தவறாக பாஸ்வேர்டை பதிவு செய்த காரணத்தால் ஐ-பேட் 48 வருடங்கள் முடங்கியுள்ளது.
இந்திய சந்தைகள் மற்றும் உலகம் முழுவதும் விலை உயர்ந்த போன்களில் ஒன்றாக கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் அல்லது ஐ-பேட் ஆகும். பொதுவாக ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துபவர்கள் ஐ-பேட் அல்லது ஐ-போனை பயன்படுத்தினால் புதுவிதமாகவும், சற்று கடின சவாலாகவும் இருக்கும். ஏனென்றால் அந்த போனில் இருக்கும் ஆப்ஷன்கள் அனைத்தும் சற்று வேறுபாடாக வே இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வேறு எந்தமொபைல் போனில் இருந்தும் ஐ-போனிற்கு டேட்டாக்களை அனுப்பவோ, அதனை பெறவோ முடியாத காரியம். அது போல கூடுதலாக மைக்ரோ சிப்பை ஐ-போனில் பொறுத்தி மெமரியை அதிகரித்துக்கொள்ளவும் முடியாது.
இவையனைத்தும் செல்போனில் உள்ள டேட்டாக்கள் மற்றும் அதை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு வசதிகளுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள ஐ-போனின் மிக சிறப்பம்சங்கள் ஆகும். ஆனால் இந்த ஐ-போனில் சில நல்லவை இருந்தாலும் சில பாதகங்களும் இருக்கின்றது என்பதை உணர்த்தும் வகையில் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரத்தைச் சேர்ந்தவர் இவான் ஆஸ்நாஸ். இவர் ‘தி நியூ யார்கர்’ என்ற வாரம்இரண்டு முறை மட்டுமே வெளியாகும் அமெரிக்கப் பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் ஐ-பேடை பயன்படுத்தி வந்தார். இவர், ஓய்வு நேரத்தில் அதனை தனது வீட்டில் வைத்துள்ளார். அப்போது அவரின் 3 வயது குழந்தை ஐ-பேடை எடுத்து பாஸ்வேர்டை தவறாக பதிவு செய்துள்ளது. விவரம் ஒன்றும் அறியாத அந்த குழந்தை அதேபோன்று பலமுறை இப்படி செய்து விளையாடியுள்ளது. ஆனால் இந்த செயலால் அவரது ஐ-பேட் 25,536,442 நிமிடங்கள் முடங்கியுள்ளது. மிக சுறுக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 48 ஆண்டு காலம் முடங்கியுள்ளது. இதனை ஆஸ்நாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் இதற்கு வேறு ஏதும் ஆலோசனை இருந்தால் சொல்லுங்கள் என்றும் அவர் வினவியுள்ளார்.